இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஏப்ரல், 2011

India Today

இனிய இதயம் கனிந்த வணக்கங்களுடன்,
                                                                       உங்கள் கவிதைராஜா  கூறும் செய்தி என்னவென்றால்  நமது தமிழகத்தின் நிலை கண்கொண்டு பார்பதற்கே பரிதாபம் ! 

                       கல்வி நிலையம்  அரசு நடத்த வேண்டும் ஆனால் தனியார் மயம். மக்களை காக்க இல்லை அரசு.

கல்வியறிவு இல்லாத தெரு பொருக்கி நாய்களுக்கு
தோள்கொடுக்கும் ஈன   காரியங்களை செய்கிறது.
இதற்காகவா  பெற்றோம் இந்த சுதந்திரம் ?

ஆங்கிலேயர் அடிமை செய்தது சிலகாலம் ஆனால் நாட்டை இன்னும் அடிமைப்படுத்தி  கிட்லரின் நாசிச ஆட்சி தலைவிரிதாடுகிறது இன்னும் இந்தியாவில்


உதாரணம் :
                             வயிற்று பசிக்காக பத்து ரூபாய்  திருடியவன்  காவலர்களால் எங்கவுண்டர் என்ற பெயரில் சுட்டு
கொல்லப்படுகிறான். ஆனால் பல்லாயிரம் கோடிதிருடியவன்
விசாரணை என்றபெயரில் சிலநாள் குளிர் சாதன அறையில்
விருந்தினர்களாக சிறை  சாலை சென்று திரும்புகின்றனர் .
சட்டத்தின் பார்வையில்  திருடன் என்பவன் ஒரு ரூபாய்
 திருடினாலும் நூறு கோடி திருடினாலும் திருடன் திருடன் தான் அப்படி இருக்க ஏன் இந்த பாரபட்சம் ?


தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் எட்டையபுர பாரதி ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்ட

பலர் கூறுகின்றனர் 
                                       ஒருவனுக்கு உணவு இல்லாத நிலை வந்தால் இந்த 
பூமியை அழிக்க வேண்டும் என்று  


ஆனால் பாரதி சொன்னது  அதுவன்று ஜெகம் என்றால் காடு  என்பது மற்றொரு பொருள் இதனால் காடுகளை பண்படுத்தி விவசாயம் செய்து
 வாழ  வேண்டும் என்று கூறுகிறார்.  

இதனை இன்றைய ஆட்சியாளர்கள் ஊரை கொள்ளையிட்டு சுவிஸ் நாட்டு  வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். இதனை நம் நாட்டிற்கு கொண்டுவந்தால் 
நம் நாட்டில் வறுமை என்பதே இருக்காது.அமெரிக்காவை விட நம் நாட்டு மக்களும் சகல வசதிகளுடன்    நாம் வாழ முடியும் .

இன்றைய இந்தியா இப்படி இருந்தால் எப்படி முன்னேறும் ?

நாளைய இந்தியா ?

சிந்திப்பீர் !
                                                                                                                                  தொடரும் ...


வியாழன், 28 அக்டோபர், 2010

திரு காமராஜன் அவர்கள், திரு கா.இராஜபாண்டியத் தேவர் அவர்களுக்கும் திருமதி.தாயம்மாள் அவர்களுக்கும் தலை மகனாக பிறந்தார். தமிழ் மொழி  பற்றிய ஆழ்  நிலை சிந்தனை கொண்டவர். 

சனி, 14 ஆகஸ்ட், 2010

கல்வி ஞானம் வேண்டி
கடவுளைத்  தொழுபவர் -பலர்
பயனடை அவர்   சிலரே !


என் இதயத்தில் நிறைந்தவள்
உயிரின் துடிப்புக்களாய் - என்றும்
சுவாசமாய் என்னை வாழ்விப்பவள்
இனிய காதலியாய் - நீ                           {காற்று மற்றும் காதல்}


பனி மழை  போல்
காதலின் பார்வை
கண் விழித்தால் மறையும்                                            { கனவு }

காத்திருந்த வேளை
பூத்திருந்த பாவை
சேர்த்து வைத்த சோலை
திருமணம்தான் நாளை

என் இனிய காதலியே
என்னுள் வாழும் உயிர் மூச்சே
உன் புன்னகை கலந்தே தான்
உன்னுள் உறைந்து விட்டேன் நான்

உன்  அழகினை ரசிக்க
என் இருகண்கள் - உன்னுடன் வாழ
காலம் பலகாத்திருக்கும்  காதலனாக
கன்னி உன்னை அடைந்திடவே !

என்னவென்று  சொல்ல என்  மனதை
கண்முன்னே உன்னை நிறுத்தி - தினமும்
கண்டுகளிக்க  ஆவலிது  எந்தனின் கூவல்
என்று விருந்தளிப்பாய்  என் இரு கண்களுக்கு !


கண்களைத்  திறந்து  பார்த்தேன்
தாயின் கருவறையின் வெளியில்
கண்களை மூடினேன்  கல்லறையில்
வாழ்க்கை எல்லாம் இடையில் ,


உழைத்துக் களைத்த இதயங்கள்
இறைச்சிக் கடையின் வாயில்களில்
உணவுப் பொருளாய் விற்பனைக்கு
ஓய்வெடுக்க துண்டித்த மாமிசமாய் !

பொன்னான நேரத்திலே புன்னகை
வந்து தவழக் கண்டேன்
என் நெஞ்சத்தில் இனிமை
இன்பத்தின் பதுமை அது
அரும்பு மலர்கள் மலர்வதுபோல்
இடைவிடாத முத்துச் சிதறல்கள்
காண்பதற்கு சொர்க்கமாய் தோன்றி
தாய் முலை உறிஞ்சி  பாலினைக்
குடித்தே  உயிர்தனை வளர்த்தே
பால் பற்கள் முளைக்கும்போது
கடித்தே இன்பத்திலே தாயை
திளைக்க  வைத்து பாலினை
மறக்க வைக்க முயன்று
உணர்த்தும் மழலை நெஞ்சம்
அதுவே எனக்கு தஞ்சம் !

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

Our Friend blogspot

அன்பினால் இணைந்த உள்ளமாய் நல்-அறிவு
பண்பு நல்கி சிறப்புடன் என்னை
கல்வியினால் இணைத்த  நண்பன் அன்று
என்னுயிர் தோழனாய் என்றும் அன்புடன்

 திரு.ராமலிங்கம் அவர்களின் இணைய தொடர்பு இணைப்பிற்கு இங்கு சொடுக்குக
romanticrams.blogspot.com

சனி, 4 ஏப்ரல், 2009

உந்தி வாங்கி புந்தி வளர்த்தீர்!
புந்தி குறைய உந்தி மிதித்து

ஓட்டினீர் மிதிவண்டி - அங்கே

உந்தி தான் ஓடிட எரிஎண்ணெய்தேடி

ஓடினீர் பொருள்தினம் கொடுத்தே வாங்கினீர்

இன்னும் அறியாத மானிடரா நீங்கள்?

என்றுதான் தெளிந்து நல்நிலைப்படுவீர் என்றே

காலங்கள் பலகடந்து எதிர்காலத்தை நோக்கி

உங்களுக்கு எடுத்துரைப்பதனை

சற்றே கவனியுங்கள்

காதல் மோகம்

என் இனிய காதலியே
என்னுள் வாழும் உயிர் மூச்சே
உன் புன்னகை கலந்தேதான்
உன்னுள் உறைந்து விட்டேன் நான்


உன் அழகினை ரசிக்க
என் இருகண்கள் -உன்னுடன் வாழ
காலம் பலகாத்திருக்கும் காதலனாக
கன்னி உன்னை அடைந்திடவே!


என்னவென்று சொல்ல என் மனதை
கண்முன்னே உன்னை நிறுத்தி - தினமும்
கண்டுகளிக்க ஆவல் இதுஎந்தனின் கூவல்
என்று விருந்தளிப்பாய் என்னிரு கண்களுக்கு

காதல் தீ

தேனிலும் இனிய சுவையே
அதனைத் தேடிடும் இந்த மனமே
இன்பக் காதல் தோன்றும் கணமே
எந்தன் தோள்களில் உந்தன் உறவே
கண்டிருந்த போதே கொண்டு சென்றாய்
என் மனதை ! என் செய்தாய் !
நெஞ்சத்தில் வைத்தாயோ? அல்லது நெஞ்சில்
தீ வைத்தாயோ? அறியாது தவித்தேன் நான் !

சனி, 7 பிப்ரவரி, 2009

மெட்டுக்கள் புதுசு

இனிய இதயம் தொட்டு
இன்ப தேன் சிட்டு
உன் பார்வை பட்டு
என் நெஞ்சில் மெட்டு
நான் படித்தேன் பாட்டு
இன்பத்தை நீ காட்டு
உன் உணர்வைக் கூட்டு
காதலை வெளிச் சாட்டு

வியாழன், 20 மார்ச், 2008

தமிழ் கவிதை

தமிழ் மொழியில் நான் எழுதிய கவிதைகள் சில இங்கே உங்களின் பார்வைக்காக சமர்பிக்கிறேன். இதனை படித்து இதில் உள்ள நிறை மற்றும் குறைகளை சுட்டி காட்டுமாறு வேண்டுகிறேன்.

1.தலைவன் தலைவி மயக்கம்
முல்லைப் பூ சரம் தொடுத்து
முழம் முழமாய் அலங்கரித்து - அதனால்
கூந்தல் மணங் கொடுத்து மயங்கியே
தும்பி போல் உறைந்த மாவண்டு
பிறந்த நான் மறுவருடம் இன்று
என்றுதான் மீளுமோ இதனி னின்று!

2. தலைவியை பிரிந்த தலைவனின் ஏக்கம்
நெஞ்சமே உனதருமை தஞ்சமே
கஞ்சமே உன்மனது கஞ்சமே
வஞ்சமே என்மேல் வஞ்சமே
கொஞ்சுமே என்ஆசை கொஞ்சுமே
இன்பமே எல்லாம் இனிஇன்பமே
உன்னை கண்டநாள் எல்லாம்
கண் பாவையும் நீயே
ஒளியாய் என்றும் என்விழியாய்
நிலையாய் தெரிவாய் நீயே
என்றும் வாழ்வில் உறவாய்
பிரிவாய் மறைவாய் என்னுடனே !
தொடரும் ....
தமிழ்மகன்
இரா.தர்ம.இராசராசன், தமிழ் இலக்கிய துறை