உந்தி வாங்கி புந்தி வளர்த்தீர்!
புந்தி குறைய உந்தி மிதித்து
ஓட்டினீர் மிதிவண்டி - அங்கே
உந்தி தான் ஓடிட எரிஎண்ணெய்தேடி
ஓடினீர் பொருள்தினம் கொடுத்தே வாங்கினீர்
இன்னும் அறியாத மானிடரா நீங்கள்?
என்றுதான் தெளிந்து நல்நிலைப்படுவீர் என்றே
காலங்கள் பலகடந்து எதிர்காலத்தை நோக்கி
உங்களுக்கு எடுத்துரைப்பதனை
சற்றே கவனியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக