கல்வி ஞானம் வேண்டி
கடவுளைத் தொழுபவர் -பலர்
பயனடை அவர் சிலரே !
என் இதயத்தில் நிறைந்தவள்
உயிரின் துடிப்புக்களாய் - என்றும்
சுவாசமாய் என்னை வாழ்விப்பவள்
இனிய காதலியாய் - நீ {காற்று மற்றும் காதல்}
பனி மழை போல்
காதலின் பார்வை
கண் விழித்தால் மறையும் { கனவு }
காத்திருந்த வேளை
பூத்திருந்த பாவை
சேர்த்து வைத்த சோலை
திருமணம்தான் நாளை
என் இனிய காதலியே
என்னுள் வாழும் உயிர் மூச்சே
உன் புன்னகை கலந்தே தான்
உன்னுள் உறைந்து விட்டேன் நான்
உன் அழகினை ரசிக்க
என் இருகண்கள் - உன்னுடன் வாழ
காலம் பலகாத்திருக்கும் காதலனாக
கன்னி உன்னை அடைந்திடவே !
என்னவென்று சொல்ல என் மனதை
கண்முன்னே உன்னை நிறுத்தி - தினமும்
கண்டுகளிக்க ஆவலிது எந்தனின் கூவல்
என்று விருந்தளிப்பாய் என் இரு கண்களுக்கு !
கண்களைத் திறந்து பார்த்தேன்
தாயின் கருவறையின் வெளியில்
கண்களை மூடினேன் கல்லறையில்
வாழ்க்கை எல்லாம் இடையில் ,
உழைத்துக் களைத்த இதயங்கள்
இறைச்சிக் கடையின் வாயில்களில்
உணவுப் பொருளாய் விற்பனைக்கு
ஓய்வெடுக்க துண்டித்த மாமிசமாய் !
பொன்னான நேரத்திலே புன்னகை
வந்து தவழக் கண்டேன்
என் நெஞ்சத்தில் இனிமை
இன்பத்தின் பதுமை அது
அரும்பு மலர்கள் மலர்வதுபோல்
இடைவிடாத முத்துச் சிதறல்கள்
காண்பதற்கு சொர்க்கமாய் தோன்றி
தாய் முலை உறிஞ்சி பாலினைக்
குடித்தே உயிர்தனை வளர்த்தே
பால் பற்கள் முளைக்கும்போது
கடித்தே இன்பத்திலே தாயை
திளைக்க வைத்து பாலினை
மறக்க வைக்க முயன்று
உணர்த்தும் மழலை நெஞ்சம்
அதுவே எனக்கு தஞ்சம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக