இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஏப்ரல், 2011

India Today

இனிய இதயம் கனிந்த வணக்கங்களுடன்,
                                                                       உங்கள் கவிதைராஜா  கூறும் செய்தி என்னவென்றால்  நமது தமிழகத்தின் நிலை கண்கொண்டு பார்பதற்கே பரிதாபம் ! 

                       கல்வி நிலையம்  அரசு நடத்த வேண்டும் ஆனால் தனியார் மயம். மக்களை காக்க இல்லை அரசு.

கல்வியறிவு இல்லாத தெரு பொருக்கி நாய்களுக்கு
தோள்கொடுக்கும் ஈன   காரியங்களை செய்கிறது.
இதற்காகவா  பெற்றோம் இந்த சுதந்திரம் ?

ஆங்கிலேயர் அடிமை செய்தது சிலகாலம் ஆனால் நாட்டை இன்னும் அடிமைப்படுத்தி  கிட்லரின் நாசிச ஆட்சி தலைவிரிதாடுகிறது இன்னும் இந்தியாவில்


உதாரணம் :
                             வயிற்று பசிக்காக பத்து ரூபாய்  திருடியவன்  காவலர்களால் எங்கவுண்டர் என்ற பெயரில் சுட்டு
கொல்லப்படுகிறான். ஆனால் பல்லாயிரம் கோடிதிருடியவன்
விசாரணை என்றபெயரில் சிலநாள் குளிர் சாதன அறையில்
விருந்தினர்களாக சிறை  சாலை சென்று திரும்புகின்றனர் .
சட்டத்தின் பார்வையில்  திருடன் என்பவன் ஒரு ரூபாய்
 திருடினாலும் நூறு கோடி திருடினாலும் திருடன் திருடன் தான் அப்படி இருக்க ஏன் இந்த பாரபட்சம் ?


தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் எட்டையபுர பாரதி ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்ட

பலர் கூறுகின்றனர் 
                                       ஒருவனுக்கு உணவு இல்லாத நிலை வந்தால் இந்த 
பூமியை அழிக்க வேண்டும் என்று  


ஆனால் பாரதி சொன்னது  அதுவன்று ஜெகம் என்றால் காடு  என்பது மற்றொரு பொருள் இதனால் காடுகளை பண்படுத்தி விவசாயம் செய்து
 வாழ  வேண்டும் என்று கூறுகிறார்.  

இதனை இன்றைய ஆட்சியாளர்கள் ஊரை கொள்ளையிட்டு சுவிஸ் நாட்டு  வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். இதனை நம் நாட்டிற்கு கொண்டுவந்தால் 
நம் நாட்டில் வறுமை என்பதே இருக்காது.அமெரிக்காவை விட நம் நாட்டு மக்களும் சகல வசதிகளுடன்    நாம் வாழ முடியும் .

இன்றைய இந்தியா இப்படி இருந்தால் எப்படி முன்னேறும் ?

நாளைய இந்தியா ?

சிந்திப்பீர் !
                                                                                                                                  தொடரும் ...


கருத்துகள் இல்லை: