இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஏப்ரல், 2009

உந்தி வாங்கி புந்தி வளர்த்தீர்!
புந்தி குறைய உந்தி மிதித்து

ஓட்டினீர் மிதிவண்டி - அங்கே

உந்தி தான் ஓடிட எரிஎண்ணெய்தேடி

ஓடினீர் பொருள்தினம் கொடுத்தே வாங்கினீர்

இன்னும் அறியாத மானிடரா நீங்கள்?

என்றுதான் தெளிந்து நல்நிலைப்படுவீர் என்றே

காலங்கள் பலகடந்து எதிர்காலத்தை நோக்கி

உங்களுக்கு எடுத்துரைப்பதனை

சற்றே கவனியுங்கள்

காதல் மோகம்

என் இனிய காதலியே
என்னுள் வாழும் உயிர் மூச்சே
உன் புன்னகை கலந்தேதான்
உன்னுள் உறைந்து விட்டேன் நான்


உன் அழகினை ரசிக்க
என் இருகண்கள் -உன்னுடன் வாழ
காலம் பலகாத்திருக்கும் காதலனாக
கன்னி உன்னை அடைந்திடவே!


என்னவென்று சொல்ல என் மனதை
கண்முன்னே உன்னை நிறுத்தி - தினமும்
கண்டுகளிக்க ஆவல் இதுஎந்தனின் கூவல்
என்று விருந்தளிப்பாய் என்னிரு கண்களுக்கு

காதல் தீ

தேனிலும் இனிய சுவையே
அதனைத் தேடிடும் இந்த மனமே
இன்பக் காதல் தோன்றும் கணமே
எந்தன் தோள்களில் உந்தன் உறவே
கண்டிருந்த போதே கொண்டு சென்றாய்
என் மனதை ! என் செய்தாய் !
நெஞ்சத்தில் வைத்தாயோ? அல்லது நெஞ்சில்
தீ வைத்தாயோ? அறியாது தவித்தேன் நான் !