தமிழ் மொழியில் நான் எழுதிய கவிதைகள் சில இங்கே உங்களின் பார்வைக்காக சமர்பிக்கிறேன். இதனை படித்து இதில் உள்ள நிறை மற்றும் குறைகளை சுட்டி காட்டுமாறு வேண்டுகிறேன்.
1.தலைவன் தலைவி மயக்கம்
முல்லைப் பூ சரம் தொடுத்து
முழம் முழமாய் அலங்கரித்து - அதனால்
கூந்தல் மணங் கொடுத்து மயங்கியே
தும்பி போல் உறைந்த மாவண்டு
பிறந்த நான் மறுவருடம் இன்று
என்றுதான் மீளுமோ இதனி னின்று!
2. தலைவியை பிரிந்த தலைவனின் ஏக்கம்
நெஞ்சமே உனதருமை தஞ்சமே
கஞ்சமே உன்மனது கஞ்சமே
வஞ்சமே என்மேல் வஞ்சமே
கொஞ்சுமே என்ஆசை கொஞ்சுமே
இன்பமே எல்லாம் இனிஇன்பமே
உன்னை கண்டநாள் எல்லாம்
கண் பாவையும் நீயே
ஒளியாய் என்றும் என்விழியாய்
நிலையாய் தெரிவாய் நீயே
என்றும் வாழ்வில் உறவாய்
பிரிவாய் மறைவாய் என்னுடனே !
தொடரும் ....
தமிழ்மகன்
இரா.தர்ம.இராசராசன், தமிழ் இலக்கிய துறை
